Paristamil Navigation Paristamil advert login

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!

இந்தியா பயணமாகும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!

25 தை 2024 வியாழன் 08:49 | பார்வைகள் : 7240


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை இந்தியா பயணமாகிறார்.

மக்ரோன் தனது தனி விமானத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூருக்கு பயணமாகிறார். நாளை பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ள 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அழைப்பினை இறுதி நிமிடத்தில் இம்மானுவல் மக்ரோன் ஏற்றுக்கொண்டு அவர் நாளைய நிகழ்வில் கலந்துகொள்ள அங்கு பயணிப்பதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

இந்திய நேரம் இன்று பகல் 2.30 மணிக்கு ஜெர்பூர் வந்திறங்கும் மக்ரோன், அங்கு சில இடங்களைப் பார்வையிட்டுவிட்டு, இன்று இரவு 9.40 மணி அளவில் தலைநகர் புது தில்லிக்கு பயணமாகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்