43 வயதில் வரலாற்று சாதனை! இந்திய வீரருக்கு வாழ்த்து கூறிய சானியா மிர்ஸா
25 தை 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 1623
இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போப்பண்ணா அதிக வயதில் அரையிறுதிக்கு நுழைந்த வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மெல்போர்னில் அவுஸ்திரேலிய ஓபன் 2024 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன், இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா இணைந்து விளையாடி வருகிறார்.
அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சாலே மற்றும் ஆன்ரெஸ் மோல்டெனி ஜோடியை எதிர்த்து இந்த இணை ஆடியது.
இப்போட்டியில் 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் ரோஹன் போப்பண்ணா இணை அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், அதிக வயதில் (43) இரட்டையர் டென்னிஸ் பிரிவில், அரையிறுதிக்கு தகுதி பெற்ற உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை போப்பண்ணா படைத்தார்.
ரோஹன் போப்பண்ணா 20 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், சானியா மிர்ஸாவும் தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.
அவரது பதிவில், 'உங்களைத் தவிர யாரும் இதற்கு தகுதியானவர் அல்ல..உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் ரோஹன் போப்பண்ணா' என தெரிவித்துள்ளார்.
ரோஹன் போப்பண்ணாவும், சானியா மிர்ஸாவும் பல போட்டிகளால் இணைந்து ஆடி வெற்றிகளை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.