மகிழுந்து மோதி தாயும் மகளும் பலியான சம்பவம்! - சாரதி விசாரணையின் கீழ்!!
25 தை 2024 வியாழன் 18:22 | பார்வைகள் : 4582
Pamiers (Ariège) நகரில் மகிழுந்து மோதி பெண் ஒருவரும் அவரது 12 வயது மகளும் பலியான சம்பவம் தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரையும் மோதித்தள்ளிய மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு முற்பட்ட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதே மகிழுந்தில் பயணித்த மேலும் இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மகிழுந்தை செலுத்திய சாரதி மீது, மனிதப்படுகொலைகள் பிரிவில் வழக்கும், அவரிடன் செல்லுபடியாகக்கூடிய காப்புறுதி இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை RN 20 நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவர் மீது குறித்த மகிழுந்து மோதியது. அதில் விவசாயப் பெண் ஒருவரும் அவரது 12 வயது மகளும் கொல்லப்பட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து, போதிய வெளிச்சமின்மை காரணமாக, வீதியின் குறுக்கே வைத்திருந்த தடுப்பினை கவனிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மகிழுந்து தடுப்பில் மோதி, அதன் பின்னே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது பாய்ந்துள்ளது. வீதி மறியல் போராட்டத்தினை சாரதி எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.