Paristamil Navigation Paristamil advert login

மகிந்தவின் தீவிர விசுவாசி விபத்தில் பலி - சோகத்தில் பிள்ளையான்

மகிந்தவின் தீவிர விசுவாசி விபத்தில் பலி - சோகத்தில் பிள்ளையான்

26 தை 2024 வெள்ளி 03:14 | பார்வைகள் : 940


வீதிவிபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு குறித்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்

அது தொடர்பில் பிள்ளையான் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,

என் சக இராஜாங்க அமைச்சரும், நண்பருமான சனத் நிஷாந்த , நேற்று அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் அகால மரணமானார் எனும் செய்தி என்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாடு பூராகவும் தன்னாலான பலதரப்பட்ட மக்கள் பணிகளை தனது நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சினூடாக முன்னெடுத்திருந்தார்.

அதன்காரணமாக பல கிராமங்களுக்கு குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

அவ்வாறான ஓர் மக்கள் தலைவனை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

நெடுஞ்சாலையின் ரி 11.01 கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான ஜீப் வீதியின் தடுப்புச்சுவரில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது சாரதி ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்த ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இதேவேளை, சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மோதிய கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதான தெரணியகல பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்