Paristamil Navigation Paristamil advert login

யாழில் மரணம் தொடர்பில் வாக்குமூலம் ​அளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் மரணம் தொடர்பில் வாக்குமூலம் ​அளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

14 ஆடி 2023 வெள்ளி 02:36 | பார்வைகள் : 10999


யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த 31வயதுடைய ​  இளைஞன் புதன்கிழமை இரவு தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் , இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு வியாழக்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்திருந்தனர்

அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண்மணி , திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண்மணியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது , பெண்மணி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மரண விசாரணைகளின் போது  75 வயதுடைய  வயோதிப பெண்மணியின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும் , யாழ்ப்பாணத்தில் அவர்  தனியாகவே வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன் கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாக வயோதிப பெண்மணி பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர்  இளைஞனின் உயிர் இழப்பில் கவலையில் இருந்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்