காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் ஹமாஸ் அறிவிப்பு
29 மார்கழி 2023 வெள்ளி 09:27 | பார்வைகள் : 4077
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் 2 மாதங்கள் கடந்தும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், உலக நாடுகள் போர்நிறுத்தத்திற்கு வலியுறுத்திய போதும் போர் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்து இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.
இதனால் மக்கள் பாரைிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்தி வருகின்ற நிலையில், போர் நிறுத்தப்படாமல் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும், இன்னும் மாதக் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.
இதற்கிடையே சுமார் ஒரு வார காலம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டபோது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர்.
இதன்போது ஒரு பிணைக்கைதிக்கு 03 பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.