Paristamil Navigation Paristamil advert login

ஒருமுறை சார்ஜ் செய்தால் 800கிமீ செல்லும் கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 800கிமீ செல்லும் கார்

29 மார்கழி 2023 வெள்ளி 13:40 | பார்வைகள் : 1458


மொபைல் தயாரிப்பு நிறுனவனமான Xiaomi, அதன் முதல் மின்சார கார் Su7ஐ பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்துகிறது.

Mi மற்றும் Redmi போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ள Xiaomi நிறுவனம், மின்சார கார் பிரிவில் நுழைந்து SU7 Series Coupe Sedan EV காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tesla, Porsche, Audi, BMW, Mercedes-Benz உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் Premium Electric Carகளுக்கு போட்டியாக வந்திருக்கும் Xiaomi எலக்ட்ரிக் கார்கள் பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் லுக்கில் மிகவும் அருமையாக உள்ளது.

Xiaomi நிறுவனம் XiaomiSU7 மற்றும் XiaomiSU7 Max ஆகிய இரண்டு கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi SU7 Max 2.78 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், Xiaomi SU7 கார் 5.28 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SU7ன் அதிகபட்ச வேகம் 210 km/h மற்றும் SU7Maxன் அதிகபட்ச வேகம் 265 km/h என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த கார்கள் அதிகாரப்பூர்வமாக '2s Supercar Clubல்' இணைகிறது.

இந்த புதிய மின்சார கார்கள் Aqua Blue, Mineral Gray மற்றும் Verdant Green ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கும் என்று Xiaomi தெரிவித்துள்ளது.

E-Motors, batteries, HyperCasting, autonomous driving மற்றும் smart cabin technology ஆகிய ஐந்து முக்கிய தொழில்நுட்பங்கள் இந்த EV கார்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் விலையும் வரும் காலங்களில் தெரியவரும்.

SU7ன் விலை 200,000 யுவான் முதல் 300,000 யுவான் (சுமார் ரூ. 25 முதல் 35 லட்சம்) வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

SU7-ன் விற்பனை 2024-ல் தொடங்கும். இது சீன நிறுவனமான BAIC குழுமத்தின் பெய்ஜிங் தொழிற்சாலையால் ஆண்டுக்கு 2,00,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

Oneplus, Vivo, Oppo மற்றும் Apple உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும் காலத்தில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

வரவிருக்கும் 5 ஆண்டுகளில், Xiaomi மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் EVகள் இந்திய சாலைகளில் காணப்படலாம், இது EV துறையில் அதிக போட்டிக்கு வழிவகுக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்