Paristamil Navigation Paristamil advert login

நோய்வாய்ப்பட்ட விடுப்பில் (arrêt maladie) 2024ல் இருந்து மூன்று நாட்கள் சம்பளப் பிடிப்பு இல்லை.

நோய்வாய்ப்பட்ட விடுப்பில் (arrêt maladie) 2024ல் இருந்து மூன்று நாட்கள் சம்பளப் பிடிப்பு இல்லை.

31 மார்கழி 2023 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 5125


இதுவரை 'arrêt maladie' நோய்வாய்ப்பட்ட விடுப்பில் முதல் மூன்று நாட்கள் சம்பளப் வழங்கப்படாமல், அடுத்து வரும் நாட்களில் இருந்தே சம்பளம் 'assurance maladie'யால் வழங்கப்படும் நடைமுறையே இருந்து வருகிறது. இந்த நடைமுறை 2024 ஜனவரியில் இருந்து இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கருச்சிதைவு ஏற்பட்டு அதனால் வேலைக்கு திரும்ப முடியாமல் 'arrêt maladie' நோய்வாய்ப்பட்ட விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு குறித்த சலுகையை சுகாதார அமைச்சு வழங்கவுள்ளது. ஆனால் மாதவிலக்கின் இருபத்தி இரண்டாவது வாரத்திற்கு முன்பு  கருச்சிதைவு ஏற்பட்டால் மட்டுமே இந்த சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் ஆண்டொன்றுக்கு சுமார் 200 000 பெண்கள் கருச்சிதைவை சந்திக்கின்றனர் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. இந்த பெண்கள் கருச்சிதைவு ஏற்படுவதால் உடல் உபாதையோடு, மனரீதியான பாதிப்பையும் சந்திக்கின்றனர், அத்தோடு சம்பளப் பிடிப்பும் அவர்களை மேலும் பாதிக்கின்றது எனவே அரசு பெண்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்