Paristamil Navigation Paristamil advert login

வருடப்பிறப்பு கொண்டாட்டம் உங்கள் கண்களுக்கு ஆபத்து அவதானம். Dr.Jean-Louis Bourges.

வருடப்பிறப்பு கொண்டாட்டம் உங்கள் கண்களுக்கு ஆபத்து அவதானம். Dr.Jean-Louis Bourges.

31 மார்கழி 2023 ஞாயிறு 08:04 | பார்வைகள் : 4585


ஒவ்வொரு ஆண்டும் வருடப்பிறப்பு கொண்டாட்ட நேரத்தில், சாதாரண நாட்களை விடவும் அதிகமான நோயாளர்கள் கண் மருத்துவ அவசரப் பிரிவிற்கு வருகிறார்கள். இந்த நிலையைக் குறைக்க முன்கூட்டியே அவதானமாக இருக்குமாறு , AP-HP இன் கண் மருத்துவ அவசரநிலைத் தலைவர் Dr.Jean-Louis Bourges வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொண்டாட்ட நேரத்தில் அதிகமாக மருத்துவமனையின் அவசரநிலைக்கு வருபவர்கள் மூன்று வகையான பாதிப்பால் வருகிறார்கள். ஒன்று champagne மற்றும் vin mousseux இவற்றை திறக்கும் போது ஏற்படும் பாதிப்பு ஏற்பட்டவர்கள். காரணம் அதன் மூடி 80km/h. வேகத்தில் புறப்படுகிறது இது கண்களை வந்தடைய 0.05 வினாடிகள் எடுக்கிறது, மூடி புறப்பட்ட வேகத்தில் கண்களைத் தாக்கினால் கண்ணுக்கு பெரும் சேதம் என்கிறார் கண் மருத்துவர்.

இரண்டாவது கிறிஸ்துமஸ், மரம் அதனை அகற்றும்போதும், தவறி விழும் போதும் ஏற்படும் ஆபத்து. கிறிஸ்துமஸ் மரத்தின் இலைகள் காய்ந்து வைரவமாய் இருக்கும் இவை கண்களில் குத்தும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவை கண்களின் உட்பகுதிவரை சென்று பாதிக்கும் இதுவும் கண்களுக்கு பெரும் சேதம்.

மூன்றாவது மருத்துவர்கள் பரிந்துரைக்காத, அழகுக்காக பொருத்தப்படும் லென்ஸ் இவை தரமானவையாக இல்லை, கண் எரிச்சல், கடி போன்றவையை ஏற்படுத்தும், தொற்றுநோய் ஏற்படும், கண்கள் வீக்கமடையும், பலர் அதனோடு தூங்குகிறார்கள் இதுவும் கண்களுக்கு பெரும் சேதம். 

நிறைவாய் 'huîtres' எனும் சிப்பிகள் இவற்றை அவதானம் இன்றித் திறக்கும் போது அதன் துகள்கள் வேகமாய் பறந்து கண்களைத் தாக்குகிறது. எனவே கொண்டாட்ட நேரத்தில் அவதானமாக இருக்கும்படி AP-HP இன் கண் மருத்துவ அவசரநிலைத் தலைவர் Dr.Jean-Louis Bourges வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்