Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் காவல்துறையின் ஒரு பகுதியான 'policiers municipaux' வேலைநிறுத்தம்.

பிரான்ஸ் காவல்துறையின் ஒரு பகுதியான 'policiers municipaux' வேலைநிறுத்தம்.

31 மார்கழி 2023 ஞாயிறு 08:05 | பார்வைகள் : 7423


இன்று 31/12 இரவு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் எனும் சந்தேகத்தில் பிரான்ஸ் தேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் ஒரு பகுதியான 'policiers municipaux' இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 24/12 இரவு சுமார் 60% சதவீத policiers municipaux' அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்திருந்தனர். தங்களின் அர்பணிப்புக்கான அங்கிகாரம், ஊதிய உயர்வு, சிறப்பு கொடுப்பனவு, ஆண், பெண் அதிகாரிகளின் ஏற்றத்தாழ்வு இவைகள் அரசு சரிசெய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை தாம் முன்னெடுப்பதாக நகராட்சி காவல்துறையின் தொழில்சங்கம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் முழுவதும் சுமார் 25 000 'policiers municipaux' நகராட்சி காவல்துறையினர் பணிபுரிகின்றனர் அவர்களில் அனைவரும் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அறியமுடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்