இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு
31 மார்கழி 2023 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 2186
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 620.441 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:
2023 டிச.,22 அன்றுடன் முடிவடைந்த வாரத்தில், 21 மாதங்களில் இல்லாத அளவாக, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 620.441 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இந்த ஆண்டு மட்டும் 58 பில்லியன் டாலர்கள் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 அக்.,ல் 645 பில்லியன் டாலர் இருந்ததே இதுவரை இருந்த அதிகபட்ச இருப்பாகும். 2022ம் ஆண்டில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 71 பில்லியன் டாலர்கள் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.