Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : 7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! - ஒருவர் கைது!

பரிஸ் : 7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! - ஒருவர் கைது!

31 மார்கழி 2023 ஞாயிறு 17:01 | பார்வைகள் : 6114


பரிசின் Trocadéro புல்வெளிப்பகுதியில் வைத்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

avenue Albert-de-Mun வீதியில் உள்ள குறித்த புல்வெளிப்பகுதியில் தனது தந்தையுடன் அமர்ந்திருந்த சிறுமி ஒருவரை 35 வயதுடைய ஒருவர் நெருங்கியுள்ளார். பின்னர் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தார். சிறுமியை இறுக்கிப்பிடித்து முத்தமிட முயற்சித்துள்ளார்.

அதற்குள்ளாக சிறுமியின் தந்தை துணிச்சலாக செயற்பட்டு குறித்த நபரை தாக்கியுள்ளார். பின்னர் அவரை மடக்கி பிடித்துவிட்டு காவல்துறையினரையும் அழைத்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தை அடையும் வரை குறித்த நபரை அவர் தடுத்து வைத்திருந்துள்ளார். காவல்துறையினர் தாக்குதலாளியை அழைத்துச் சென்றுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்