டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு பிரியா விடை கொடுத்த டேவிட் வார்னர்
1 தை 2024 திங்கள் 07:38 | பார்வைகள் : 1680
அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டி உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் ஆட்டம் குறித்து கடந்த சில காலங்களாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக அவுஸ்திரேலிய அணியின் இடது கை நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
அத்துடன் 2 முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றார்.
டேவிட் வார்னர் இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
டேவிட் வார்னர் தன்னுடைய ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 179 ஓட்டங்கள் குவித்துள்ளார்.