Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் முதியோர்களை பராமரித்து கொள்ளும் ரோபோ வடிவமைப்பு!

சீனாவில் முதியோர்களை பராமரித்து கொள்ளும் ரோபோ வடிவமைப்பு!

14 ஆடி 2023 வெள்ளி 07:13 | பார்வைகள் : 2381


சீனாவில் முதியோர்களை கவனமாக பராமரித்து கொள்ளும் வகையில் மனித உருவ ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவில், 2035 ஆம் ஆண்டிற்குள் 60 வயதை தாண்டியர்வர்களின் எண்ணிக்கை 28 கோடியிலிருந்து 40 கோடிக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனமே இந்த மனித உருவ ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோவின் மூலம், மருத்துவ சேவையை வழங்குதல், நோயாளிகளை படுக்கையில் இருந்து சக்கர நாற்காலிக்கு மாற்றுதல், பொருட்களை எடுத்துக் கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலான ரோபோவே தமது குறிக்கோள் என்று ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென் கோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்சமயம் ஆராய்ச்சி நிலையில் உள்ள இந்த ரோபோ அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் உபயோகத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்