குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த Zomato ஊழியர்

3 தை 2024 புதன் 07:54 | பார்வைகள் : 4824
பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக Zomato ஊழியர் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் டேங்கர் லொறிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
சில பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதால் அங்கு வாகன ஓட்டிகள் வரிசையில் நீண்ட தூரம் நின்று தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் தனியார் உணவு டெலிவரி (Zomato) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தன்னுடைய பைக்கிற்கு பெட்ரோல் கிடைக்காததால் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்துள்ளார்.
பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக Zomato ஊழியர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த காட்சிகளை சிலர் தங்களது போன்களில் படம் பிடித்து அதை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1