Paristamil Navigation Paristamil advert login

முத்தமிட்ட நபருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை. பாரிஸ் நீதிமன்றம்.

முத்தமிட்ட நபருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை. பாரிஸ் நீதிமன்றம்.

4 தை 2024 வியாழன் 07:56 | பார்வைகள் : 7062


கடந்த சனிக்கிழமை நல்லிரவைத் தாண்டி ஞாயிறு அதிகலைக்குள்ளான நேரத்தில், 25 வயது இளைஞர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட செய்தி ஏற்கெனவே எங்கள் இனையத்தில் வெளியானது. அந்த வழக்கின் முடிவு நேற்று (03/01/2024) வெளியானது.

குடும்பத்தாருடன் Trocadéro பகுதியில் 7 வயது சிறுமி இருந்துள்ளார். சில நிமிடங்கள் அவர் பெற்றோரை விட்டுப் விலகி சென்று சமயத்தில், அப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, பரிசில் கட்டிட வேலைகள் செய்யும் 25 வயதான நபர் ஒருவர் குறித்த சிறுமியை மடக்கிப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். அந்த சமயம் சிறுமியின் தந்தை, பலாத்காரம் செய்ய முற்பட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் கையளித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளி தரப்பு, குறித்த நபர் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் முத்தமிடவில்லை எனவும், அவருக்கு ஞாபகமறதி நோய் உள்ளது எனவும், அத்தோடு அந்த சமயத்தில் அவர் மதுபோதையில் இருந்தார் எனவும் வாதிட்டுள்ளது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், குற்றவாளிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனையும், வருங்காலத்தில் அவர் சிறுவர்களுடன் பழகுவதற்கும் தடையும் விதித்துள்ளது. என Le Parisien பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்