யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மர்ம பொருள்

4 தை 2024 வியாழன் 08:33 | பார்வைகள் : 5150
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த மர்ம பொருள் குறித்து மக்கள் மத்தியில குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அண்மையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று பௌத்த கொடிகளுடன் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1