Paristamil Navigation Paristamil advert login

முட்டை சுக்கா

முட்டை சுக்கா

4 தை 2024 வியாழன் 09:04 | பார்வைகள் : 1500


முட்டையை வைத்து எவ்வளவோ விதம் விதமான உணவு வகைகளை செய்து வருகிறோம். அந்த வகையில் காரச்சாரமான முட்டை சுக்கா செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை, 
சோம்பு – 1 டீ ஸ்பூன், 
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன், 
தேங்காய் துறுவல் – 2 டேபிள் ஸ்பூன், 
சின்ன வெங்காயம், 
தக்காளி, 
தனியா விதைகள், 
மிளகு, கிராம்பு, 
பட்டை, 
கறிவேப்பிலை, 
கொத்தமல்லி 
உப்பு 

முதலில் முட்டையை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டைக்கு மசாலா கலவை தயார் செய்ய வேண்டும். முதலில் சின்ன வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு, மிளகு, மஞ்சள் தூள், பட்டை, தேங்காய் துறுவல், தனியா விதைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து நன்றாக அரைத்து விடாமல் பொடி பொடியாக இருக்கும்படி கொஞ்சமாக அரைத்து மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுத்து அதில் சுக்கா மாசாலா கலவையை சேர்த்து தேவையான அளவு எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கிரேவி அளவுக்கு இல்லாமல் சற்று கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வெட்டி வைத்திருந்த முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

முட்டை மஞ்சள் கருவை சுக்கா செய்து இறக்கியபின் சேர்த்து மெல்ல கிளறி விட வேண்டும். அப்போது மஞ்சள் கரு உடையாமலும், மசாலா சேர்ந்தும் உண்பதற்கு சரியாக இருக்கும். இவ்வாறு செய்தால் சுவையான முட்டை சுக்கா தயார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்