Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி : சாதனை படைத்தது இஸ்ரோ.

விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி : சாதனை படைத்தது  இஸ்ரோ.

5 தை 2024 வெள்ளி 15:38 | பார்வைகள் : 1384


விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ புதிய சாதனை படைத்தது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட்  செயற்கை கோளை , பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டுடன் ஜன.1  ம் தேதி  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 

இந்த  இந்த ராக்கெட் பூமியிலிருந்து 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்திய பின், பூமியில் இருந்து 350 கி.மீ  தாழ்வட்ட பாதையில் போயம் (POEM ) என்ற பகுதியில் 10 செயற்கைக்கோள்கள்  வெற்றிகரமாக  நிலைநிறுத்தியது.

அதில் ஒன்றிலிருந்து தான்  எக்ஸ்ட்ரோ லைட் என்ற செல்  ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்க முடியுமா என மேற்கொண்ட சோதனை வெற்றிபெற்றது. இதையடுத்து  விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா முதல் முறையாக விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்