டிகாக் அணிக்கு மரண அடிகொடுத்த மார்க்ரம் படை
7 மாசி 2024 புதன் 10:36 | பார்வைகள் : 1742
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த SA20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
ஜோர்டான் 21 (19) ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து அபெல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தாவித் மலான் மற்றும் கேப்டன் மார்க்ரம் பார்ட்னர்ஷிப் அமைந்தனர்.
இந்தக் கூட்டணி 49 ஓட்டங்கள் எடுத்தது. மலான் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அணியின் ஸ்கோர் 128ஆக உயர்ந்தபோது, 30 (23) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் மார்க்ரம் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. கேசவ் மகாராஜ், ஜூனியர் டலா தலா 2 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் மற்றும் பிரிட்டோரியஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டர்பன் அணி, பார்ட்மேன் மற்றும் மார்கோ யென்சென் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பார்ட்மேன் பந்துவீச்சில் ஜேஜே ஸ்முட்ஸ் அடித்த ஷாட்டை, மார்க்ரம் அந்தரத்தில் பறந்து ஒற்றை கையால் கேட்ச் செய்து மிரட்டினார்.
அதன் பின்னர் டி காக் 20 ஓட்டங்களிலும், முல்டர் 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட கிளாசென் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆக, டர்பன் அணி 106 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மார்கோ யென்சென் மற்றும் பார்ட்மேன் தலா 4 விக்கெட்டுகளும், லியாம் டாவ்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.