ரஜினி குடும்பம் அனிருத்தை புறக்கணிக காரணம் இதுவா?
8 மாசி 2024 வியாழன் 08:22 | பார்வைகள் : 2295
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் மூலமாகத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடல் மூலம் உலகளவில் டிரெண்டானார் அனிருத். அந்தப் படத்திற்கு பின்பு இளைய தலைமுறையின் ப்ளேலிஸ்டில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக அவரது கிராஃப் மேலே போனது. ரஜினிக்கு நெருங்கிய சொந்தக்காரரான அனிருத்தின் இசை திறமையை சிறுவயதிலேயே கவனித்த தனுஷ் அவருக்கு அப்போதே விலையுயர்ந்த கீபோர்டு வாங்கி பரிசளித்து ஊக்குவித்தார். அதுபோலவே, ஐஸ்வர்யாவும் தன்னுடைய முதல் படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
இப்படியான சூழலில்தான் தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா என மூவரும் தங்கள் படங்களில் தொடர்ந்து அனிருத்தைப் புறக்கணிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட மோதலால் அனிருத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் தனுஷ்.
தன்னுடைய ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ஜிவி பிரகாஷூம், டி50 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், டி51 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இசையமைக்கின்றனர். அதுபோலவே, தன்னுடைய ‘லால் சலாம்’ படத்திற்கும் அனிருத்தைத் தவிர்த்து ரஹ்மான் இசையைப் பயன்படுத்தினார் ஐஸ்வர்யா. மேலும், ரஜினியின் இளையமகளான செளந்தர்யாவும் இதற்கு முன்பு இயக்கிய ‘விஐபி2’ படத்திற்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார். லாரன்ஸ் வைத்து அவர் இயக்கும் புதிய படத்திற்கு ரஹ்மான் அல்லது ஜிவி பிரகாஷ் இசை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் கைவசம் ‘இந்தியன்2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’, ‘தேவரா’ போன்றப் படங்கள் கைவசம் இருக்கிறது. இதனாலேயே, இவர்களது படங்களுக்கு இசையமைக்க நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.