Paristamil Navigation Paristamil advert login

இனிவரும் காலங்களில் ஒருமுறை மருத்துவரை சந்திக்க 50€ யூரோக்கள்?

இனிவரும் காலங்களில் ஒருமுறை மருத்துவரை சந்திக்க 50€ யூரோக்கள்?

8 மாசி 2024 வியாழன் 09:24 | பார்வைகள் : 4583


பிரான்சில் ஒரு நோயாளி 'médecine générale' பொது மருத்துவரை சந்திப்பதற்கு கடந்த ஆண்டு வரை 25€ யூரோக்களாக இருந்து வந்தது. பின்னர் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தாலும், மருத்துவர்களுக்கான தொழில் சங்கங்களின் போராட்டத்தினால், மருத்துவரை சந்திப்பதற்கான கட்டணம் 1.50€ யூரோக்களால் அதிகரித்து 26.50€ யூரோக்களாக இப்போது உள்ளது.

இந்த நிலையில் தமக்கான கட்டணம் இன்றைய வாழ்க்கைச் செலவோடு ஒப்பிடும்போது மிக்குறைவாக உள்ளதாக தெரிவித்து, மருத்துவர்களுக்கான தொழில் சங்கங்கள் இன்று மீண்டும் (L'assurance Maladie) அரச மருத்துவ காப்புறுதி நிறுவனத்தோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

நோயாளர்கள் பொது மருத்துவரை சந்திப்பதற்கு 50€ யூரோக்கள் அறவிட அரச மருத்துவச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுக்க உள்ளனர். கட்டணத் தொகையை அதிகரிக்கா விட்டால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்திலும், போராட்டங்களிலும் ஈடுபட நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொழில் சங்கங்கள் கேட்கும் 50€ யூரோக்கள் அதிகரிப்பை L'assurance Maladie) அரச மருத்துவ காப்புறுதி நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது எனவும், இருப்பினும் 30€ யூரோக்கள் வரை கண்டனத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்