போக்குவரத்து தாமதங்கள்! - இழப்பீடு வழங்க தயாராகும் Île-de-France Mobilités!
9 மாசி 2024 வெள்ளி 06:00 | பார்வைகள் : 2687
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடருந்து போக்குவரத்துக்கள் சந்தித்த தாமதங்களை கருத்தில் கொண்டு அவற்றுக்கான இழப்பீடுகளை தொடருந்து நிறுவனங்களான RATP மற்றும் SNCF வழங்க உள்ளது.
இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்துச் சபையான Île-de-France Mobilités, நேற்று பெப்ரவரி 8, வியாழக்கிழமை இதனை அறிவித்துள்ளது. நவிகோ பயனாளர்களுக்கு, அதன் மொத்த விலையில் பாதி இழப்பீடாக வழங்கப்படும் என அறிய முடிகிறது..
RER சேவைகளில் A, B, C மற்றும் D வழிச்சேவைகளுக்கும், 'P ' வழிச்Transilien சேவைகளுக்கும் இந்த தொகை வழங்கப்பட உள்ளது.