Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நகரசபையை அலங்கரிக்க ஒரு மில்லியன் யூரோக்கள் செலவு! - விமர்சனங்கள்!

பரிஸ் நகரசபையை அலங்கரிக்க ஒரு மில்லியன் யூரோக்கள் செலவு! - விமர்சனங்கள்!

9 மாசி 2024 வெள்ளி 06:05 | பார்வைகள் : 1862


ஒலிம்பிக் போட்டிகளின் போது நகரசபை பிரம்மாண்டமான விளக்குகளாலும், பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளன. நகரசபை வீண் ஆடம்பரத்திற்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Hôtel de Ville கட்டிடத்தை சுற்றி பல்வேறு வரைகலை பதாகைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக EUR 983,352.04 யூரோக்கள் தொலையினை நகரசபை ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் வலுத்துள்ளன.

‘இது அபரிமிதமான தொகை. மக்கள் பணம் வீணானது!’ என வலதுசாரி அரசியல் தலைவர் David Alphand தெரிவித்துள்ளார்.

முன்னதாக SUV வாகனங்களுக்கான தரிப்பிடக்க்கட்டணங்கள் அதிகரிப்பது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. அதற்காக 400,000 யூரோக்கள் செலவிட்டிருந்தமையும் விமர்சிக்கப்பட்டிருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்