Paristamil Navigation Paristamil advert login

லியோனல் மெஸ்ஸியின் செயலை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்

லியோனல் மெஸ்ஸியின் செயலை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்

9 மாசி 2024 வெள்ளி 07:35 | பார்வைகள் : 1163


அர்ஜென்டினா கால்பந்து உச்ச நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி தனது காயத்தில் இருந்து அதிசயமாக மீண்டு வந்துள்ளது ஹொங்ஹொங் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று ஹொங்ஹொங் XI அணியுடன் Inter Miami அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக லியோனல் மெஸ்ஸி விளையாடவில்லை.

இது ஹொங்ஹொங் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் 3 நாட்களுக்கு பிறகு ஜப்பானின் Vissel Kobe அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறங்கியுள்ளது தற்போது பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி, ஹொங்ஹொங் மற்றும் சீனத்து அரசியவாதிகளும் மெஸ்ஸியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் பார்க்கலாம் என்ற ஆசையில் முண்டியடித்த ரசிகர்கள் தற்போது டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது ஹொங்ஹொங் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் பலர் விமர்சித்துள்ளனர். ஹொங்ஹொங் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய போட்டியில் மெஸ்ஸி விளையாடாதது குறித்து, அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அரசாங்கமும், அனைத்து கால்பந்து ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பான் ஆட்டத்திற்கு முன்னர், ஹொங்ஹொங் ரசிகர்களிடம் மெஸ்ஸி மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்