Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் தேர்தல் நிலவரம் - எதிர்பாராத முடிவுகள்....

பாகிஸ்தான் தேர்தல் நிலவரம் - எதிர்பாராத முடிவுகள்....

9 மாசி 2024 வெள்ளி 08:42 | பார்வைகள் : 1532


பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சுயேட்சைகள் ஆச்சர்யப்படும் வகையில் எழுச்சி பெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) சில இடங்களில் போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 13 முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், ஐந்து இடங்களில் இம்ரான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.

நவாஸ் ஷெரீப்பின் Pakistan Muslim League (N) கட்சி நான்கு இடங்களிலும், Pakistan Peoples Party (PPP) நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாடு முழுவதும் மொத்தம் 266 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 134 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும்.

60 இடங்கள் பெண்களுக்கும், பத்து இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபையில் 296 இடங்களும், சிந்து சட்டசபையில் 130 இடங்களும், கைபர் பக்துன்க்வாவில் 113 இடங்களும், பலுசிஸ்தானில் 51 இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்