Paristamil Navigation Paristamil advert login

பாதசாரியை தாக்கி 10,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளை!

பாதசாரியை தாக்கி 10,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளை!

9 மாசி 2024 வெள்ளி 09:30 | பார்வைகள் : 8096


பாதசாரி ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து 10,000 யூரோக்கள் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய ஒருவரிடம் இருந்தே இந்த கை கடிகாரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த நபரை தாக்கி அவர் அணிந்திருந்த கடிகாரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைகளி கொள்ளையில் ஈடுபட்டது 16 மற்றும் 17 வயதுடைய இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 4.15 மணிக்கு அவர்கள் இருவரும் பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்