சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவன் கைது!

9 மாசி 2024 வெள்ளி 18:40 | பார்வைகள் : 8921
14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bourges (Cher) நகரில் சம்பவம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விதியில் நடந்து சென்ற குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் ஒருவர், சிறுமியை மடக்கிப் பிடித்து கிழே தள்ளி விட்டு அவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்..,
பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ள நிலையில், பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், வழியை மறித்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சம்பவம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1