Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஹரிகரனின் இசைநிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய மக்கள்

யாழில் ஹரிகரனின் இசைநிகழ்ச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய மக்கள்

10 மாசி 2024 சனி 01:58 | பார்வைகள் : 1586


யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிகரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன், தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்