Paristamil Navigation Paristamil advert login

சுற்றுலாப் பயணிப் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட புலம்பெயர் சிறுவன் கைது

சுற்றுலாப் பயணிப் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட புலம்பெயர் சிறுவன் கைது

10 மாசி 2024 சனி 09:36 | பார்வைகள் : 1634


அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிப் பெண்ணொருவரை சிறுவன் ஒருவரன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

டைம்ஸ் சதுக்கத்தில் Sneakers வாங்க காத்திருந்த பெண்ணொருவரை, 15 வயது சிறுவன் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் அவரை பொலிஸார் விரட்டிச் சென்றபோது, குறித்த சிறுவன் இருமுறை மோசமாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான 38 வயது பெண் பிரேசிலைச் சேர்ந்தவர் என பின்னர் தெரிய வந்தது.

அவரது காலில் சிறுவன் சுட்ட குண்டு பாய்ந்தது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் நண்பர் கைது செய்யப்பட்டார். 

பின்னர் தப்பிச் சென்ற சிறுவன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 13,500 டொலர்கள் வெகுமதி அளிப்பதாக, சிசிடிவி காட்சிகளில் பதிவான புகைப்படங்களை வெளியிட்டு NYPD அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் தேடலுக்கு பிறகு Yonkers பகுதியில் துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Jesus Alejandro Rivas Figueroa என்ற அந்த சிறுவன் வெனிசுலாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டபோது Figueroa கதறி அழுதுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்