Paristamil Navigation Paristamil advert login

இப்படியெல்லாம் உங்கள் அன்பை வெளிபடுத்துங்கள்

இப்படியெல்லாம் உங்கள் அன்பை வெளிபடுத்துங்கள்

12 மாசி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 2187


காதல், திருமணம் என்ற உறவுகளில், மகிழ்ச்சியான நேரங்களில் மட்டுமல்லாமல், கஷ்ட நஷ்டங்களில் துணையிருப்பேன் என்ற மறைமுக உறுதி மொழி இருக்கும். காதலர்கள், தம்பதிகள் ஒருவொருக்கொருவர் எதில் எல்லாம் உறுதி அளிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

காலம் முழுவதும் இணைந்திருப்பது : எவ்வளவு காலம் சேர்ந்து வாழ முடியும் என்பது பற்றி யாரும் கூற முடியாது. ஆனால், எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், எப்போதும் உன்னை நேசிக்க, உன் அன்பைப் பெற முயற்சி செய்து கொண்டிருப்பேன், காலம் முழுக்க சேர்ந்திருபேன் என்று கூறலாம்.

விமர்சனத்தை எதிர்கொள்ள தயார் : தம்பதிகளுக்கு இடையே ஆசையான, அன்பான விஷயங்களை, நல்ல விஷயங்களை மட்டும் எப்போதுமே பகிர்ந்து கொள்ள முடியாது. இருவரில் யாரேனும் ஒருவர் ஏதேனும் தவறு செய்தால், அதைப்பற்றி வெளிப்படையாக கூறும்போது, அதை ஏற்றுக்கொள்ள தயார் என்ற உறுதிமொழியை அளிக்கலாம்.

உறவு போரடிக்காமல் பார்த்துக் கொள்வது  : எவ்வளவு தீவிரமான, ஆழமான காதலாக இருந்தாலும் சரி, ஒரு கட்டத்தில் உறவு சலித்துப் போகும் அளவுக்கு ஏதேனும் தோன்றலாம். வழக்கமான ரொட்டீன் போர் அடிப்பது போல இருக்கலாம். எனவே இந்த காலத்தில் வெறுமையாகத் தோன்றாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்ற உறுதிமொழியை அளிக்கலாம். ஒரு விஷயத்தை நீ 10 முறை கூறினாலும் அதை நான் சோர்வடையாமல் கேட்பேன் என்று கூறி அன்பை வெளிப்படுத்தலாம்.

தெளிவான எல்லைகள் : எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும், அதில் எல்லை இருக்கிறது. எனவே இருவரும் எல்லைகளைப் பற்றி வெளிப்படையாக கேட்டு, ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் இருப்பதற்கு ப்ராமிஸ் செய்து கொள்ளலாம்.

கடந்த காலம் பற்றி பேசி காயப்படுத்தக் கூடாது  : எல்லோருக்குமே கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்கள் அல்லது சிலருக்கு கடந்த கால இருக்கும். கடந்த காலத்தில் இருப்பதைப் போலவே, இன்றும் ஒரு நபர் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அனுபவங்களும் காலமும் ஒரு நபரை மாற்றும் தன்மை கொண்டது. எனவே கடந்த காலத்தில் செய்த செயல்கள் அல்லது மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் காயப்படுத்தக்கூடாது என்று இருவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழியும் மேற்கொள்ளலாம்.

கணவன் / மனைவியின் குடும்பமும் முக்கியம்  : காதல் அல்லது காதலி, கணவன் அல்லது மனைவி என்று குறிப்பிட்ட ஒரு உறவுக்கு மட்டுமல்லாமல் அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இயல்பாக பழகுவதற்கு முயற்சி செய்வதாக உறுதி கூறலாம்.

விட்டுக்கொடுப்பதை பற்றி வருத்தப்படக் கூடாது  : உறவுகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் விட்டு கொடுத்து போவது உறவை அழகாக்கும். அந்தசமயத்தில் இருவருமே விட்டுக் கொடுக்கும் பொழுது, அதை பற்றி வருத்தப்படக் கூடாது. உறவு நீண்ட காலம் நீடிப்பதற்கு விட்டுக் கொடுப்பது ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உன்னை காதலிக்கிறேன் என்பதை தினமும் வெளிப்படுத்த வேண்டும்  : இது கொஞ்சம் ட்ரமாட்டிக் ஆக இருந்தாலுமே, இது ரொமாண்டிக்கான விஷயமாகத்தான் இன்றும் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன் என்று தினசரி உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

நேரம் ஒதுக்க வேண்டும்  : எவ்வளவு பிசியான நபராக இருந்தாலும் சரி, உங்கள் கணவன் அல்லது மனைவிக்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பார்ட்னருக்கு பிடித்த விஷயத்தை சேர்ந்து செய்யலாம்  : விருப்பு வெறுப்புகள் வேறு வேறாக இருந்தாலும், எதிர்மறை குணங்கள் கொண்ட நபராக இருந்தாலும், காதலுக்காக, அன்புக்காக பிடித்த விஷயத்தை நீங்கள் சேர்ந்து செய்வதாக உறுதியளிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்