Paristamil Navigation Paristamil advert login

பால் உற்பத்தியாளர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!

பால் உற்பத்தியாளர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!

12 மாசி 2024 திங்கள் 18:03 | பார்வைகள் : 6779


பால் உற்பத்தியாளர்கள் நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பெப்ரவரி 13 ஆம் திகதி, நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதாக பிரான்சின் பால் உற்பத்தி பொருட்களுக்கன சபை (APLI) அறிவித்துள்ளது.

பிரான்சில் பால் பண்ணையாளர்கள் அனுபவிக்கும் சூழ்நிலை குறித்து ஒரு விழிப்புணர்வு உரை ஒன்று காலை 11 மணி அளவில் ஊடகங்களுக்கு முன்பாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பால் உற்பத்தியாளர்கள் உழவு இயந்திரங்கள் மூலம் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்