Paristamil Navigation Paristamil advert login

இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

13 மாசி 2024 செவ்வாய் 00:58 | பார்வைகள் : 2148


தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்தும், அமைச்சர் காந்தியின் தலையீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு துறையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், அண்ணாமலை சார்பில் அளிக்கப்பட்ட மனு:

பொங்கலுக்கு தலா, 1.68 கோடி வேட்டி, சேலைகள் தயாரிக்க, தி.மு.க., அரசு உத்தரவு பிறப்பித்தது. இலவச வேட்டி, சேலை தயாரிப்பில், ஜவுளி துறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கும், மக்களுக்கு வழங்கப்பட்ட துணிகளின் தரத்திற்கும் சம்பந்தமில்லை.

மக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 22 சதவீதம் மட்டுமே பருத்தி, 68 சதவீதம், 'வார்ப் பாலியஸ்டர்' இருப்பது கண்டறியப்பட்டது. அமைச்சர் காந்தியின் கருத்து, வேட்டி தயாரிக்கப்பட வேண்டிய விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது.

கிலோ பருத்தி நுால், 320 ரூபாய்; பாலியஸ்டர், 160 ரூபாய்க்கு 'டெண்டர்' செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாலியஸ்டர் கிலோ, 90 முதல், 110 ரூபாய் வரை சந்தையில் கிடைக்கிறது. 

அதிகப்படியான பருத்தி நுால் பயன்படுத்தாமல், 60.29 கோடி ரூபாய் இலவச வேட்டி கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. இதன் மீது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்