Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு

இலங்கையில் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு

13 மாசி 2024 செவ்வாய் 02:51 | பார்வைகள் : 13149


அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபான, கந்தேகும்புர, ஹலாம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை எறும்புகள் கொட்டுவதால் தோல் நோய்கள்  ஏற்படுவதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

'கொடயா' என அழைக்கப்படும் இந்த வகை எறும்புகள், மிளகு, தென்னை, பாக்கு போன்ற தாவரங்களில் கூட்டமாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எறும்பு இனத்தை தொற்றுநோயாக மாற்றும் முன், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்