இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அமுல்படுத்துவதில் கடினமான நிலை!
14 மாசி 2024 புதன் 13:36 | பார்வைகள் : 2552
இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதில் பல்வேறு நெருங்கடிகள் எதிர்கொள்ளப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
5ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும், இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.
5ஜி தொழில்நுட்பத்துக்கு நாடு முழுவதும் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்க கணிசமான முதலீடு தேவைப்படுகிறது.
இலங்கையில் 5ஜி தொழிநுட்பம் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. 5ஜி அறிமுகத்தின் ஊடாக சாதனங்கள் மற்றும் தரவுத் திட்டங்களின் விலை ஆரம்பத்தில் பல பயனர்களுக்கு அதிகமாக இருக்கலாம்.
5ஜி வெற்றிகரமாக அமுலாக்கம் செய்யப்பட்டால் முதலீடுகளை ஈர்க்கவும், புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் அணுகலை அதிகரித்து பொருளாதாரத்திற்கு பயனளிப்புகளை செய்யவும் முடியும் என இத்திட்டத்தில் பணியாற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்பிக்கைக்குரிய சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சோதனைகளும் ஓரளவு வெற்றிகரமாக உள்ளது. 5G வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்துவரும் முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.