Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி - இங்கிலாந்து அணியின் அதிரடி

 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி - இங்கிலாந்து அணியின் அதிரடி

2 ஆவணி 2023 புதன் 08:32 | பார்வைகள் : 6860


மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

பிபா மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - சீனா அணிகளுக்கு இடையிலான போட்டி அடிலெய்டின் Hindmarsh மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் அலெஸ்சியா ரூஸ்ஸோ கோல் அடித்தார். அதன் பின்னர் அவர்களின் வேகத்தை சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

26வது நிமிடத்தில் லாரென் ஹெம்ப்பும், 41வது நிமிடத்தில் லாரென் ஜேம்ஸ் ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர்.

சீன அணிக்கு 57வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாங் ஷுங் கோல் அடித்தார்.

இங்கிலாந்தின் லாரென் ஜேம்ஸ் 65வது நிமிடத்தில் காற்றில் பறந்து வந்த பந்தை அப்படியே கோலாக மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து க்ளோ கெல்லி 77வது நிமிடத்திலும், ரேச்சல் டேலி 84வது நிமிடத்திலும் கோல் விளாசினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இது இங்கிலாந்தின் ஹாட்ரிக் வெற்றி ஆகும்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்