இந்தோனேசிய-பாலி நகருக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு...!

15 மாசி 2024 வியாழன் 10:53 | பார்வைகள் : 6484
இந்தோனேசியாவில் பாலி நகரில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதிகளில் ஒன்றான பாலிக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் நுழைவு வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
இதேவேளை கடந்த காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தவறான நடத்தைக்கு பாலி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மத ஸ்தலங்களை அவமதித்த ரஷ்ய பிரஜை ஒருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதால் வெளிநாட்டவர்கள் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதையும் தடை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025