Paristamil Navigation Paristamil advert login

Clichy-sous-Bois : வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் பலி!

Clichy-sous-Bois : வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் பலி!

16 மாசி 2024 வெள்ளி 13:58 | பார்வைகள் : 7181


93 ஆம் மாவட்டத்தின் Clichy-sous-Bois நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை காவல்துறையினருக்கு எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு விரைந்து சென்றனர். கட்டிடத்தின் முகப்பு வரவேற்பு விறாந்தையில், ஆண் ஒருவர் வாளால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.

41 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டதாகவும், அவர் அதே கட்டிடத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, அதே கட்டிடத்தின் மற்றொரு வீட்டில் வசிக்கும் ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபரது ஆடையில் இரத்தக்கறை இருந்ததாகவும், அவர் தனது வீட்டுக் கதவினை தடுப்பு வைத்து அழுத்தி பிடித்ததாகவும், காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள் நுழைந்து அவரைக் கைது செய்ததாகவும் அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்