Paristamil Navigation Paristamil advert login

பயணியின் காலுறைக்குள் வைத்து கடத்தப்பட்ட பச்சோந்தி! - உடும்பு உள்ளிட்ட 21 ஊர்வன மீட்பு!

பயணியின் காலுறைக்குள் வைத்து கடத்தப்பட்ட பச்சோந்தி! - உடும்பு உள்ளிட்ட 21 ஊர்வன மீட்பு!

16 மாசி 2024 வெள்ளி 18:49 | பார்வைகள் : 2280


பயணி ஒருவர் தனது காலுறைக்குள் மறைத்து வைத்து பச்சோந்தி ஒன்றை கடத்தி வந்த நிலையில், Gare de l'Est தொடருந்து நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது பயணப்பெட்டியில் பல்லிகள், பச்சோந்தி இனத்தைச் சேந்த பல ஊர்வன, அதேபோல் உடும்பு போன்ற விலங்குகள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அவை அனைத்தும் தொடருந்து நிலைய பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது. மொத்தமாக 21 ஊர்வன அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

பெப்ரவரி 11 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

ஐரோப்பாவில் நான்காவது மிகப்பெரிய சட்டவிரோத செயல் இந்த விலங்குகள் கடத்தலாகும். சென்ற 2022 ஆம் ஆண்டு பிரான்சில் 52,506 விலங்குகள் (ஆமைகள், பாம்புகள், முயல், பச்சோந்தி உள்ளிட்ட பல விலங்குகள்) கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்