◉ இரண்டில் ஒரு TGV! - இன்றும் நாளையும் போக்குவரத்து பாதிப்பு!

17 மாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 5090
இன்று மற்றும் நாளை நெடுந்தூர தொடர்ந்து சேவைகளான TGV Inoui, TGV Ouigo, TER, Intercités மற்றும் Eurostar உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
தொடருந்து சேவைகளின் கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs) பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதை அடுத்து, இந்த சேவைகள் பாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக TGV Inoui, TGV Ouigo சேவைகள் இரண்டில் ஒன்று மட்டுமே இயக்கப்படும்.
இரண்டில் ஒரு Intercités சேவை இயக்கப்படும்.
Ouigo classiques சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Eurostar சேவைகள் *ஒன்றிரண்டு தடைப்படும் என அறிய முடிகிறது. TER சேவைகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
**
அதேவேளை, முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் 100% சதவீதம் பணம் மீளளிக்கப்படும் எனவும் SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.