Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணிக்கு எதிராக இமாலய சாதனை படைத்த வீரர்!

இந்திய அணிக்கு எதிராக இமாலய சாதனை படைத்த வீரர்!

17 மாசி 2024 சனி 08:54 | பார்வைகள் : 1555


ராஜ்கோட் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். 

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் இங்கிலாந்து எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று தனது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியுள்ளது. 18 ஓட்டங்கள் எடுத்து ஜோ ரூட் அவுட் ஆனார். 

அடுத்த ஓவரிலேயே குல்தீப் பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோவ் டக்அவுட் ஆனார். ஆனால் பென் டக்கெட் அதிரடியில் மிரட்டினார். அவர் 139 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்த வீரர் டக்கெட் ஆவார். மொத்தம் 151 பந்துகளை எதிர்கொண்ட டக்கெட், 2 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 153 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

இந்திய அணிக்கு எதிராக அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

பென் டக்கெட் (இங்கிலாந்து) - 139 பந்துகள்
கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) - 201 பந்துகள்
இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்) - 209 பந்துகள்
ஓலி போப் (இங்கிலாந்து) - 212 பந்துகள்
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 218 பந்துகள் 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்