Paristamil Navigation Paristamil advert login

தமிழக காங்.,கிற்கு புதிய தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்.,கிற்கு புதிய தலைவர் செல்வப்பெருந்தகை

17 மாசி 2024 சனி 16:51 | பார்வைகள் : 4465


தமிழக காங்., தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக காங்., தலைவராக இருந்த கே.எஸ். அழகரிக்கு பதிலாக செல்வபெருந்தகையை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.  

இது குறித்து காங்.,பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,    தமிழக காங்., தவைராக செல்வ பெருந்தகையும், சட்டசபை  குழு தலைவராக ராஜேஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்., நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செல்வபெருந்தகை கூறியது, தன்னை தமிழக காங்.,  தலைவராக நியமித்துள்ளது ஆச்சரியம் தந்துள்ளது. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன்.  தலைமையின் நம்பிக்கை வீண்போகாமல் பணியாற்றுவேன். வரும் லோக்சபா தேர்தலில்   40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம் என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்