Saint-Denis : காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி!

17 மாசி 2024 சனி 17:54 | பார்வைகள் : 9822
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானார். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Saint-Denis நகரில் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு 1 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது. நகராட்சி காவல்துறையினரின் மகிழுந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி, இளைஞன் தூக்கி வீசப்பட்டார்..இதில் வயது குறிப்பிடப்படாத இளைஞன் படுகாயமடைந்தார். கால் மற்றும் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இளைஞன் மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபப்ட்டார். விபத்து ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தில் நகராட்சி காவல்துறை வீரர் ஒருவரது கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1