Yvelines : காவல்துறை அதிகாரி தற்கொலை!

17 மாசி 2024 சனி 18:25 | பார்வைகள் : 6105
Yvelines மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை Viroflay நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. 40 வயதுடைய அவர், வீட்டில் தனியாக வசித்ததாகவும், எவ்வித கடிதங்களும் விட்டுச் செல்லாமல், தனது சேவைத்துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்தில் இடம்பெற்ற காவல்துறை வீரரின் இரண்டாவது தற்கொலை இதுவாகும்.