பரிஸ் : 12 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து!

19 மாசி 2024 திங்கள் 13:11 | பார்வைகள் : 7956
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
rue de Lyon வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் காலை 10.20 மணி அளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 120 தீயணைப்பு படையினர் 40 வாகனங்களில் தண்ணீர் பாய்ச்சி தீயணை அணைத்தனர்.
இச்சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஐந்து அடுக்குகள் உள்ள கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.