Paristamil Navigation Paristamil advert login

யாழில் குறுக்கே பாய்ந்த நாயால் இளைஞன் பலி

யாழில் குறுக்கே பாய்ந்த நாயால் இளைஞன் பலி

21 மாசி 2024 புதன் 07:49 | பார்வைகள் : 6406


யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிவு மாணவரொருவா் உயி​ரிழந்துள்ளார்.

மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை (21) தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்துள்ள சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்