Paristamil Navigation Paristamil advert login

மனதில் நினைத்தால் Mouse நகரும்., மஸ்கின் நியூரோலிங்க் திட்டத்திற்கு முதல் வெற்றி

மனதில் நினைத்தால் Mouse நகரும்., மஸ்கின் நியூரோலிங்க் திட்டத்திற்கு முதல் வெற்றி

22 மாசி 2024 வியாழன் 08:02 | பார்வைகள் : 1933


நவீன மருத்துவ சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படும் எலோன் மஸ்க்கின் நியூரோலிங்க் திட்டம் முதல் வெற்றியை எட்டியுள்ளது.

உலகில் முதன்முறையாக மூளையில் சிப் (Brain Chip) பொருத்தப்பட்ட ஒருவர் தனது மனதில் நினைத்து ரிமோட் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தியதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில், நியூரோலிங்க் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நபர் தற்போது பூரண நலமுடன் உள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்த பக்க விளைவுகளும் இல்லை.

திரையில் உள்ள கணினி மவுஸ் பாயின்டரை தனது எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

நியூரோலிங்க் என்பது எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு தொடக்கமாகும், இது அவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் பணிகளைச் செய்ய அனுமதிக்கும் வகையில் மக்களின் மூளையில் மின்னணு சில்லுகளைப் பொருத்துகிறது.

கணினி மவுஸ் மற்றும் கீபோர்டை யோசித்து பயன்படுத்தலாம் என்று நியூரோலிங்க் கூறுகிறது.

பக்கவாதம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமையும் என கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்