Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வி! நிபுணர் விமர்சனம்

பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வி! நிபுணர் விமர்சனம்

22 மாசி 2024 வியாழன் 12:33 | பார்வைகள் : 2162


பிரித்தானியா நடத்திய அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துள்ளதால், அது பிரித்தானியாவுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அந்த அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அந்த ஏவுகணை சிறிது தூரத்திலேயே கடலில் விழுந்துவிட்டது.

2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியா நடத்த, அது தோல்வியில் முடிந்தது. 

ஆகவே, இரண்டாவது முறை அந்த சோதனையை பிரித்தானியா நடத்தும்போது எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கூறியிருந்தார் பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான Anthony Glees என்பவர்.

அத்துடன், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை வெற்றிபெற்றால், ரஷ்ய ஜனாதிபதி புடின் அது குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளமாட்டார் என்று கூறிய பேராசிரியர் Anthony Glees, அதே நேரத்தில், அந்த சோதனை 2016ஆம் ஆண்டு நடந்ததைபோல தோல்வியில் முடிந்ததானால் அவ்வளவுதான், புடின் சத்தமாக சிரிக்கப்போகிறார். 

அதனால், கிரெம்ளின் மாளிகையே அதிரப்போகிறது என்று கூறியிருந்தார். 

ஆகவே, இந்த முறையாவது சொதப்பாமல் ஒழுங்காக அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார் பேராசிரியர் Anthony Glees.

அவர் எச்சரித்ததுபோலவே, அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்துவிட்டது. 

இந்நிலையில், பிரித்தானியாவின் அணு ஆயுத சோதனை தோல்வியில் முடிந்ததைக் கண்டு புடின் சிரிக்கிறார் என்று கூறியுள்ளார் பேராசிரியர் Anthony Glees.

இது பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தலைக்குனிவு என்று கூறியுள்ள அவர், கடற்படைத் தலைமை இதற்கு விளக்கமளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் என உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், இப்படி நடந்துள்ளது மிகவும் கவலையை அளிக்கிறது என்கிறார் பேராசிரியர் Anthony Glees.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்