Paristamil Navigation Paristamil advert login

மே.வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை: அனுராக் தாக்கூர் பேட்டி

மே.வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை: அனுராக் தாக்கூர் பேட்டி

22 மாசி 2024 வியாழன் 13:14 | பார்வைகள் : 1146


மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு ஏற்பட்ட அவமானம். பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். இதனை காக்க மம்தா அரசு தவறிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தை காப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை. மத்திய அமைச்சர்கள் சிலர் சண்டிகருக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தி உள்ளனர். வன்முறை மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக உயர்த்தி உள்ளோம்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 2013-14ல் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.7,30,000 கோடி செலுத்தப்பட்டது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 மடங்கு அதிகம் ஆகும். பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறது. நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து எதுவும் செய்யாதவர்களை விவசாயிகளுக்கு பா.ஜ., அரசு ஏதும் செய்யவில்லை என சொல்லக் கூடாது. இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்