யாழில் கொழும்பு பெண்களின் மோசமான செயல்

23 மாசி 2024 வெள்ளி 10:30 | பார்வைகள் : 6374
யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(23) காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு - கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் 15 நிமிடத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1